சிறுவனுக்கு முத்தம் கொடுத்த விவகாரம்: மன்னிப்பு கேட்டார் தலாய் லாமா
தலாய்லாமா எட்டு வயது சிறுவனுக்கு முத்தம் கொடுத்த புகைப்படம் இணையதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தற்போது அவர் இது குறித்து மன்னிப்பு கேட்டுள்ளார்.
புத்த மதத்தின் தலைவராக தீபத்தைச் சேர்ந்த கலாய்லாமா இருந்து வரும் நிலையில் அவர் தற்போது இந்தியாவில் உள்ள அருணாச்சல பிரதேசத்தில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தலாய்லாமா குறித்து ஏற்கனவே பல்வேறு சர்ச்சை செய்திகள் வெளியான நிலையில் தற்போது வெளியான வீடியோவில் எட்டு வயது சிறுவனுக்கு அவர் லிப்முத்தம் கொடுக்கும் காட்சி உள்ளது.
18 வயது நிரம்பாத சிறுவனிடம் தலாய்லாமா இது போல் நடந்தது பாலியல் சீண்டல் என்றும் அவருக்கு தக்க தண்டனை அளிக்க வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் குரல் கொடுக்க தொடங்கியதால் இந்த விவகாரம் மிகப்பெரிய பரபரப்பு ஏற்படுத்தியது.
இந்த நிலையில் 8 வயது சிறுவனுக்கு முத்தம் கொடுத்த விவகாரத்தில் தலாய்லாமா மன்னிப்பு கேட்டுள்ளார். அந்த சிறுவனின் குடும்பத்தாரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் இந்த நிகழ்வுக்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
Edited by Mahendran