வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 6 ஜூன் 2018 (20:42 IST)

பாஜகவிற்கு எதிரான கூட்டணிக்கு தயார்: அகிலேஷ் யாதவ்

மத்தியப்பிரதேசத்தில் பாஜகவிற்கு எதிரான கூட்டணிக்கு சமாஜ்வாடி தயார் என அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

 
இந்தியா முழுவதும் பாஜகவிற்கு எதிரான குரல் வேகமாக ஒலித்து வருகிறது. காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் பாஜகவிற்கு எதிரான அணி திரண்டு வருகின்றனர். 
 
இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் ஆட்சி செய்து வரும் பாஜக வரும் 2019 தேர்தலில் வெற்றி பெற கூடாது என்பதில் மற்ற கட்சியினர் கவனத்துடன் செயல்பட்டு வருகின்றனர். இதற்கான காரணமே கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க மிகவும் கடுமையாக போராடியது.
 
பாஜக - காங்கிரஸ் இடையேயான போட்டியில் காங்கிரஸ் இறுதியாக கர்நாடகவில் வெற்றி பெற்றது. இந்நிலையில் அகிலேஷ் யாதவ் கூறியதாவது:-
 
சமாஜ்வாடி கட்சி பாஜகவிற்கு எதிரான ஒத்த கருத்துடைய எதிர்கட்சிகள் வரிசையில் கூட்டணியாக போட்டியிட தயார். மத்தியப்பிரதேசத்தில் கூட்டணிக்கு தயாராக உள்ளோம். கூட்டணிக்கான முயற்சி வெற்றியடைவில்லை என்றால் சமாஜ்வாடி கட்சி மத்தியப்பிரதேசத்தில் 230 தொகுதிகளிலும், சத்தீஷ்காரில் 90 தொகுதிகளிலும் தனியாக களமிறங்கும் என்று கூறியுள்ளார்.