உச்ச நீதிமன்றம் தீர்ப்பு : தகுதி நீக்கம் செய்த 17 பேர் பா.ஜ.கவில் இணைகின்றனர்...
கர்நாடக சட்டசபையில் சில மாதங்களுக்கு முன் காங்கிரஸ் , மதச்சார்பற்ற ஜனதா தள கட்சிகளில் இருந்த, 17 எம்.எல்.ஏக்கள் பாஜவுக்கு ஆதரவு தந்தனர். இதையடுத்து, அப்போதைய சபாநாயகர், இந்த 17 பேரையும் தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டார். இது அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, கர்நாடக சட்டசபை சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 பேரும் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.
அதன்பின்னர், குமாரசாமி தலைமயிலான மதச்சார்பற்ற ஜனதா தலம் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் தங்களின் பெரும்பான்மையை கர்நாடக சட்டசபையில் நிரூபிக்க முடியமால் தோல்வி அடைந்தனர்.
இதையடுத்து முதல்வர் குமாரசாமி தன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அடுத்த சில தினங்களில் எடியூரப்பா தலைமையிலான பாஜகவினர் தங்கள் பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சி அமைத்தனர். தற்போது , கர்நாடகத்தில் எடியூரப்பா முதல்வராக உள்ளார்.
17 எம்.எல்.ஏக்களைத் தகுதிநீக்கம் செய்தது தொடர்பான வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வெளியிட்டுள்ளது. அதில், 17 எம்.எல்.ஏக்களைத் தகுதிநீக்கம் செய்தது செல்லும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, தகுதிநீக்க 17 பேரும் பாஜகவில் இணையவுள்ளதாக அம்மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.