வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 1 மே 2023 (14:46 IST)

இனிமேல் விவகாரத்தை உடனடியாக வழங்கலாம்: சுப்ரீம் கோர்ட்டு அரசியல் சாசன அமர்வு

Divorce
விவாகரத்து செய்ய முடிவு செய்யும் தம்பதிகளுக்கு ஆறு மாத கால அவகாசம் கொடுக்கப்படும் நிலையில் இனிமேல் விவாகரத்து உடனடியாக வழங்கலாம் என அரசியல் சாசன அமர்வு தெரிவித்துள்ளது 
 
ஐந்து நீதிபதிகளை கொண்ட சுப்ரீம் கோர்ட் அரசியல் சாசன அமர்வு இது குறித்து மேலும் கூறியபோது 143 ஆவது பிரிவின் கீழ் திருமண உறவு மேம்பட வழியே இல்லை என்ற நிலையில் ஆறு மாத காத்திருக்கும் கால தேவையில்லை என்றும் உடனடியாக திருமண பந்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து விவாகரத்து வழங்கலாம் என்றும் தெரிவித்துள்ளது. 
 
மேலும் 142 வது பிரிவின் கீழ் முழுமையான நீதியை வழங்க அதன் அசாதாரண அதிகாரங்களைப் பயன்படுத்தலாம் என்றும், திருமண பந்ததை மீட்க முடியாத முறிவு உள்ள அடிப்படையில் விவாகாரத்தை உடனடியாக வழங்கலாம் என்றும் அரசியல் சாசன அமர்வு தெரிவித்துள்ளது 
 
Edited by Mahendran