1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 27 அக்டோபர் 2021 (11:11 IST)

பெகாசஸ் உளவு விவகாரம்; விசாரிக்க சிறப்பு குழு! – உச்சநீதிமன்றம் உத்தரவு!

பெகாசஸ் உளவு செயலி மூலமாக ஒட்டுகேட்கப்பட்டது தொடர்பான வழக்கில் விசாரிக்க சிறப்பு குழுவை அமைக்க உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.

இஸ்ரேலின் உளவு செயலியான பெகாசஸ் மூலமாக இந்தியாவில் உள்ள பத்திரிக்கையாளர்கள், அரசியல் பிரமுகர்களை மத்திய அரசு ஒட்டுக்கேட்டதாக எழுந்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இதுகுறித்து விசாரணை தேவை என உச்சநீதிமன்றத்தில் 500க்கும் அதிகமான மனுக்கள் அளிக்கப்பட்டன.

இந்த வழக்கை விசாரித்து வந்த உச்ச நீதிமன்றம் இன்று வெளியிட்ட உத்தரவில் “பெகாசஸ் ஒட்டுகேட்பு விவகாரம் அதிமுக்கியமானதாக படுகிறது. நாட்டில் பத்திரிக்கையாளர்கள் மட்டுமல்லாது பொதுமக்களுக்கு கருத்து சுதந்திரமும், தனிமனித சுதந்திரமும் அவர்களது ரகசியத்தை காப்பதும் அவசியம். எனவே இந்த விவகாரத்தை விசாரிக்க 3 பேர் கொண்ட குழு அமைக்கப்படும்” என தெரிவித்துள்ளது.