நாடாளுமன்றத்தில் இன்று சூரியன் உதயமாகிறது - ராகுல் காந்தி
நாடாளுமன்றத்தில் விவசாயிகள் பெயரில் இன்று சூரியன் உதயமாகிறது என ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கடந்த ஆண்டு வேளாண் சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய நிலையில் விவசாயிகள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கொரோனா காலகட்டத்திலும் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் தொடர்ந்து டெல்லியில் போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில் பிரதமர் மோடி விவசாயிகளின் முன்னேற்றத்தை மனதில் கொண்டே வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டது. பின்னர் வேளாண் சட்டங்களை விவசாயிகள் எதிர்த்து வருகின்றனர். எனவே எதிர்வரும் குளிர்கால கூட்டத்தொடரில் வேளாண் சட்டங்களை முறைப்படி திரும்ப பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார்.
இதனிடையே இன்று பல்வேறு பிரச்சனைகளுக்கு இடையில் தொடங்கும் பாராளுமன்ற கூட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து ராகுல் காந்தி தெரிவித்துள்ளதாவது, நாடாளுமன்றத்தில் விவசாயிகள் பெயரில் இன்று சூரியன் உதயமாகிறது. வேளாண் சட்டம் வாபஸ் மசோதா பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.