Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதலனுக்கு பதிலாக தேர்வெழுதிய மாணவி: பிடிபட்டதால் நேர்ந்த விபரீதம்!

Written By Mahendran
Updated: திங்கள், 26 டிசம்பர் 2022 (17:39 IST)
குஜராத் மாநிலத்தில் காதலனுக்கு பதிலாக தேர்வு எழுதிய மாணவி ஒருவர் தனது படிப்பை இழந்த தகவல் தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
குஜராத் மாநிலத்தில் கல்லூரி மாணவி ஒருவர் தனது காதலனுக்காக தேர்வு எழுத முடிவு செய்தார். தனது காதலன் சுற்றுலா சென்று இருப்பதால் அவருக்காக தேர்வு எழுத திட்டமிட்ட அவர் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதினார்
 
அப்போது தேர்வறையில் சந்தேகமடைந்த தேர்வு அலுவலர் அந்த மாணவியிடம் விசாரணை செய்தபோது அவர் ஆள்மாறாட்டம் செய்தது உறுதி செய்யப்பட்டது. 
 
 இதனையடுத்து தண்டனையாக அவர் தனது படிப்பை பரிதாபமாக இழந்துவிட்டார். காதலனுக்காக தேர்வு எழுதியது கண்டுபிடித்த தகவல் அறிந்த அந்த மாணவி படிக்கும் கல்லூரி நிர்வாகம் அவரை டிஸ்மிஸ் செய்து உள்ளது. அது மட்டுமின்றி அவருடைய காதலன் மூன்று வருடத்திற்கு தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

எல்லாம் காட்டு

அமெரிக்காவில் இரு தோழிகளை கொலை செய்த கேரள பெண்... ஓணம் பண்டிகைக்கு பின் நடந்த விபரீதம்..

தமிழகத்தில் எந்தெந்த கோயில்களில் செல்பொன்களுக்கு அனுமதி இல்லை.. 52 கோயில்களின் முழு பட்டியல்...

100 நாள் தவெக ஆட்சி!.. திமுக செயல்பாடு எப்படி இருக்கு?!.. வெளியான கருத்துக்கணிப்பு!...

சர்க்கரை விலை உயர்வு!.. விலை உயரும் ஸ்வீட்ஸ்!.. பண்டிகை காலத்தில் மக்கள் அதிர்ச்சி...

விஜய் பிரதமரா?.. இது செம காமெடி!.. டிடிவி தினகரன் நக்கல்....

அடுத்த கட்டுரையில்
Show comments