செவ்வாய், 12 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 28 ஏப்ரல் 2020 (18:36 IST)

போதைக்கு புதிய பார்முலா! நண்பனின் பேச்சால் உயிரிழந்த மாணவர்!

கர்நாடகாவில் போதைக்காக சானிட்டைசரோடு இருமல் டானிக்கை கலந்து குடித்த வரலாற்று மாணவர் உயிரிழந்துள்ளார்.

இந்தியா முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளைத் தவிர மற்ற அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதன் ஒரு பக்கமாக தமிழகத்தில் செயல்பட்டு வந்த சாராயக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. ஊரடங்கு அறிவிக்கப்பட்டு 33 நாட்கள் முடிந்துள்ள நிலையில் தமிழகம் மற்றும் கேரளாவில் இதுவரை மது கிடைக்காத மன உளைச்சலில் 10 க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இப்போது கர்நாடகாவில் கர்நாடக பல்கலைக்கழகத்தில் வரலாற்று ஆராய்ச்சி படிப்பு படித்து வந்த சுதீப் என்ற மாணவர் நண்பர் ஒருவரின் பேச்சைக் கேட்டு இருமல் டானிக்கோடு, சானிட்டைசரைக் கலந்துகுடித்தால் போதை வரும் என நம்பி அதை செய்துள்ளார். ஆனால் அதை குடித்த சிறிது நேரத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

தற்செயலாக அங்கு வந்த வீட்டு உரிமையாளர், வீட்டுக்குள் சுதீப், சடலமாகக் கிடப்பதை பார்த்து போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து போலிஸார் அவர் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.