Daily Horoscope

‛பாஸ் போடுங்க’’.. ஃபெயிலானால் அப்பா திருமணம் செய்து வைத்துவிடுவார்.. விடைத்தாளில் கெஞ்சிய மாணவி

Written By Siva
Updated: புதன், 13 மார்ச் 2024 (07:21 IST)
என்னை பாஸ் ஆக்கிவிடுங்க, இல்லைன்னா என் வாழ்க்கையே போயிடும்: விடைத்தாளில் மாணவியின் நூதன கோரிக்கை..!
 
பீகார் மாநிலத்தில் சமீபத்தில் பொது தேர்வு முடிவடைந்துள்ள நிலையில் இந்த தேர்வை எழுதிய மாணவி ஒருவர் தயவு செய்து என்னை பாஸ் ஆக்கிவிடுங்க, நல்ல மதிப்பெண் போட்டு விடுங்கள், இல்லாவிட்டால் என்னுடைய அப்பா எனக்கு திருமணம் செய்து வைத்துவிடுவார், அதனால் என் வாழ்க்கையே போய்விடும் என்று விடைத்தாளில் எழுதி இருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. 
 
பீகார் மாநிலத்தில் சமீபத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவடைந்த நிலையில் தற்போது விடைத்தாள் திருத்தும் பணியை நடைபெற்று வருகிறது. இந்த விடைத்தாளில் ஒரு மாணவி எழுதிய வாசகங்கள் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது 
 
அந்த மாணவி விடைத்தாளில் தன்னுடைய தந்தை மிகவும் கஷ்டப்பட்டு வருகிறார் என்றும் இந்த தேர்வில் நான் நல்ல மதிப்பெண் எடுக்காவிட்டால் என்னை மேல் படிப்பு படிக்க வைக்க மாட்டார் என்றும் திருமணம் செய்து வைத்துவிடுவார், எனவே எனக்கு நல்ல மதிப்பெண் போடுங்கள் இல்லாவிட்டால் என் வாழ்க்கையே போய்விடும் என்று வேண்டுகோள் விடுத்து விடைத்தாளில் எழுதி உள்ளார். 
 
மாணவர்கள் இவ்வாறு விடைத்தாளில் எழுதுவது சகஜம்தான் என்றும் ஆனால் நாங்கள் சரியான விடை எழுதி இருந்தால் மட்டுமே மதிப்பெண் போடுவோம் என்றும் ஆசிரியர்கள் இதற்கு பதில் அளித்து இருந்தனர். 
 
Edited by Siva
 

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments