திங்கள், 17 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 9 அக்டோபர் 2020 (10:14 IST)

கோ கார்ட் வாகனத்தில் பெண்ணின் தலைமுடி சிக்கி நடந்த விபரீதம்! பெற்றோர் அதிர்ச்சி!

ஹைதராபாத்தில் உள்ள விளையாட்டு மைதானம் ஒன்றில் கோர் கார்ட் வாகனத்தை ஓட்டிய பெண் விபத்துக்குள்ளாகி பலியாகியுள்ளார்.

ஹைதராபாத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவியான ஸ்ரீ வர்ஷினியும் தோழிகளும் குர்ரம் குடா என்ற பகுதியில் உள்ள ஒரு விளையாட்டு மையத்தில் கோ-கார்டிங் எடுத்து ஓட்டி வந்துள்ளனர். இதில் ஸ்ரீவர்ஷினி தலைக்கு ஹெல்மெட் அணிந்தும் எப்படியோ அவர் தலைமுடி அந்த வாகனத்தின் டயரில் சிக்கியுள்ளது. இதில் ஸ்ரீவர்ஷின் தடுமாறி கீழே விழ அவர் மேல் வாகனம் விழுந்துள்ளது.

இதையடுத்து படுகாயமடைந்த அவரை தோழிகள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் இந்த செய்தி அறிந்து அதிர்ச்சிக்குள்ளான மாணவியின் பெற்றோர், தங்கள் மகளின் சாவுக்கு கோ-கார்டிங் அமைப்பாளர்களின் அலட்சியமே காரணம் என குற்றம் சாட்டியுள்ளனர். இது சம்மந்தமாக அப்பகுதி போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.