1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Papiksha Joseph
Last Modified: திங்கள், 25 ஜனவரி 2021 (17:19 IST)

கொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை!

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா தீவிரமடைந்ததை அடுத்து, மத்தியர அரசு கொரோனா கால ஊரடங்கை அறிவித்தது. ஏழு மாதங்களை கடந்த நிலையில் ஓரளவு தொற்றும் கொரோனா இறப்பு விகிதமும் குறைந்துள்ளது.
 
சமீபத்தில் மத்திய அரசு கொரோனாவுக்கு தடுப்பூசி வழங்குவதாக அறிவித்த நிலையில் சீரம் நிறுவனம் தயாரித்த தடுப்பூசியை நாட்டு மக்களுக்கு வழங்க முடிவு செய்து மருத்துவர்கள் , செவிலியர்கள் உட்பட மக்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது. 
 
தடுப்பூசி போட்டுக்கொண்ட பலருக்கு உடல்நலப் பிரச்சனைகள் ஏற்பட்டது. அதில் இருவர் இறந்துவிட்டனர். இதனால் மக்கள் பலரும் தடுப்பூசி போடவே அச்சப்படுகின்றனர். இந்நிலையில் தற்ப்போது கொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி, அவதூறு பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், தயாரிக்கப்பட்டுள்ள 2 தடுப்பூசிகளுமே இந்திய தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தால் பாதுகாப்பானவை என உறுதி செய்யப்பட்டிருக்கிறது எனவும் விளக்கம் கொடுத்துள்ளனர்.