வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 3 டிசம்பர் 2021 (09:01 IST)

ராணுவ விமானத்தின் டயரை திருடிய மர்ம நபர்கள்! – காவல்நிலையத்தில் புகார்!

ராணுவ விமானத்தின் டயரை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் லக்னோவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜோத்பூரில் உள்ள ராணுவ விமானப்படை தளத்தில் மீரஜ் உள்ளிட்ட ராணுவ விமானங்கள் பல உள்ளன. இவற்றிற்கு தேவையான உதிரி பாகங்கள், டயர்கள் உள்ளிட்ட பொருட்கள் அவ்வபோது அனுப்பி வைக்கப்படுகின்றன.

அவ்வாறாக லக்னோ விமானப்படை தளத்தில் இருந்து ஜோத்பூர் விமானப்படை தளத்திற்கு தேவையான தளவாடங்கள் ராணுவ வாகனத்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஆனால் அந்த வாகனத்தில் இருந்து மீரஜ் ரக போர்விமானங்களில் பயன்படுத்தப்படும் டயர்களை மட்டும் மர்ம கும்பல் திருடியுள்ளது. இதுகுறித்து இராணுவ அதிகாரிகள் உத்தர பிரதேச காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில் இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.