Daily Horoscope
✕

கட்சி மாறி காங்கிரஸ்க்கு ஓட்டு போட்ட மஜத எம்எல்ஏ!

Written By Sugapriya Prakash
Updated: வெள்ளி, 10 ஜூன் 2022 (14:21 IST)
கர்நாடகாவில் மாநிலங்களவை தேர்தலில் கட்சி மாறி மஜத எம்.எல்.ஏ., காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்துள்ளார்.  

 
நாடு முழுவதும் 57 மாநிலங்களவை எம்பிக்களின் பதவி வரும் ஜூன் 22 ஆம் தேதி காலியாகிறது. இதையடுத்து மாநிலங்களவை தேர்தல் வரும் ஜூன் 10 ஆம் தேதி (இன்று) நடைபெறுகிறது. தமிழ்நாடு உட்பட 11 மாநிலங்களில் 41 எம்.எல்.ஏ.க்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதால் எஞ்சிய 16 இடங்களுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது.
 
மகாராஷ்டிரா, ராஜஸ்தான், ஹரியானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் 16 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மாலை 4 மணி வரை நடைபெற உள்ள தேர்தலில் எம்எல்ஏக்கள் வாக்களித்து வருகின்றனர். 
 
மகாராஷ்டிராவில் 6, கர்நாடகா மற்றும் ராஜஸ்தானில் தலா 4, ஹரியானாவில் 2 எம்.பி. இடங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது. ஆனால் இந்த 4 மாநிலங்களில் உள்ள 16 மாநிலங்களவை இடத்துக்கு 22 பேர் போட்டியிடுவதால் தேர்தல் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் கர்நாடகாவில் மாநிலங்களவை தேர்தலில் கட்சி மாறி மஜத எம்.எல்.ஏ., காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்துள்ளார்.  காங்கிரஸ் கட்சி பிடிக்கும் என்பதால் அதற்கு ஓட்டு போட்டதாக கே.ஸ்ரீனிவாச கவுடா எம்.எல்.ஏ பேட்டி அளித்துள்ளார். 

எல்லாம் காட்டு

சென்னையில் இல்லாத கல்யாண மண்டபமா?!.. ஸ்டாலினை விளாசிய வைகோ...

நிறைய கடன் இருக்கு!.. அவமானம்.. அதான் கொள்ளையடிச்சேன்.. நிஷாந்த் வாக்குமூலம்...

இந்தியாவை ஃபாலோ பண்ணா அமெரிக்கா பொருளாதாரம் உயரும் - டிரம்ப் பேச்சு

குழந்தைக்கு செலுத்தும் ரூ.9 கோடி மருந்து வெறும் ரூ.2.5 லட்சம்!.. இந்திய மருத்துவர் கண்டுபிடிப்பு!....

7 மாதங்களுக்கு பின் உயர்ந்த இந்திய ரூபாய் மதிப்பு...

அடுத்த கட்டுரையில்
Show comments