’தீவிரவாத தாக்குதல்’ - இந்திய ராணுவ வீரர் ஒருவர் பலி!
ஜம்மு- காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் மாவட்டத்தில் உள்ள ஜகுரா பகுதியிலுள்ள சி.ஆர்.பி.எப்., முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
இதனையடுத்து பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த தாக்குதலில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும், 8 வீரர்கள் பலத்த காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றது.