ஒய் ப்ளஸ் பத்தாது; இசட் ப்ளஸ் பாதுகாப்பு வேணும்! – சீரம் செயல் அதிகாரி மனு!
இந்தியாவில் கொரோனா தடுப்பூசியாக சீரம் நிறுவனத்தின் தடுப்பூசி பயன்படுத்தப்படும் நிலையில் கூடுதல் பாதுகாப்பு கோரி அதன் செயல் அதிகாரி மனு அளித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில் இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசியும் பயன்பாட்டில் உள்ளது. இந்நிலையில் சீரம் நிறுவனத்தின் செயல் அதிகாரி அடர் பூனவாலாவுக்கு மத்திய அரசின் ஒய் ப்ளஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மும்பை உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை மனு அளித்துள்ள அடர் பூர்னவாலா தடுப்பூசி தொடர்பாக தொடர்ந்து பல்வேறு கொலை மிரட்டல்கள் வருவதாகவும் அதனால் தனக்கும் தன் குடும்பத்திற்கு ஒய் ப்ளஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.