வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 26 மே 2020 (18:24 IST)

பீகாருக்கு செல்ல வேண்டிய சிறப்பு ரயில் பெங்களூர் வந்ததால் பரபரப்பு

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக ரயில் சேவை நிறுத்தப்பட்டு இருந்த நிலையில் கடந்த சில நாட்களாக புலம்பெயர் தொழிலாளர்களுக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் இந்த சிறப்பு ரயில் இயக்கப்படுவதில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக பயணிகள் குற்றஞ்சாட்டி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
குறிப்பாக குஜராத்தில் இருந்து புறப்பட்ட சிறப்பு ரயில் ஒன்று பீகார் செல்வதற்கு பதிலாக கர்நாடக மாநிலத்திலுள்ள பெங்களூருக்கு சென்றதால் அந்த ரயிலில் பயணம் செய்த புலம்பெயர் தொழிலாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது
 
குஜராத்தில் இருந்து சுமார் 1200 பயணிகளுடன் நேற்று முன்தினம் பீகாருக்கு ஒரு சிறப்பு ரயில் கிளம்பியது. இந்த ரயில் மும்பையில் திடீரென திசை மாறி தென்பகுதி நோக்கிச் சென்றதாகவும் சில மணி நேரம் கழித்து அந்த ரயில் பெங்களூருவில் நின்றதாகவும் அந்த ரயிலில் பயணம் செய்த புலம்பெயர் தொழிலாளர்கள் அதிர்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்
 
இரண்டு மாதங்களுக்கு பிறகு எப்போது தங்கள் சொந்த ஊர் செல்வோம் என்று சோகத்தில் தாங்கள் இருந்ததாகவும் ஆனால் தற்போது குஜராத்தில் இருந்து பீகாருக்கு செல்வதற்கு பதிலாக கர்நாடக மாநிலத்திற்கு அந்த ரயிலில் அழைத்து வந்து விட்டதாகவும் இப்போது தாங்கள் எப்படி பீகார் செல்வது என்றும் அவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்
 
இந்த ரயில் மட்டுமன்றி மேலும் சில ரயில்கள் பாதை மாறி வெவ்வேறு திசையில் பயணம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு இரயில்வேயின் திட்டமும் கணினி முறைகள் தடம்புரண்டு விட்டதே இந்த குளறுபடிகளுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இந்த தவறுகளை உடனடியாக சரி செய்து புலம்பெயர் தொழிலாளர்களை அவரவர் சொந்த மாநிலத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்