திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 30 ஆகஸ்ட் 2022 (18:09 IST)

காங்கிரஸ் தலைவர் தேர்தல்: சோனியா காந்தி,ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி போட்டி இல்லையா?

sonia rahul
காங்கிரஸ் தலைவர் தேர்தல் வரும் செப்டம்பர் 16-ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில் இந்த தேர்தலில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகிய மூவரும் போட்டியிடப் போவதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளதால் காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
பெரும்பாலும் காங்கிரஸ் கட்சியின் தலைவராக நேரு குடும்பத்திலிருந்து வருகின்றனர் என்பதும் இடையில் சில ஆண்டுகள் மட்டும் வேறு தலைவர்கள் இருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் ஏற்கனவே சோனியா காந்தி ராகுல் காந்தி ஆகியோர் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தபோது காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது என்று கூறப்பட்ட நிலையில் செப்டம்பர் 16ஆம் தேதி நடைபெறும் காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலில் சோனியா காந்தி ராகுல் காந்தி பிரியங்கா காந்தி ஆகிய மூவரும் போட்டியிட மாட்டார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.
 
ஆனால் அதே நேரத்தில் சோனியா காந்தி ஆதரவுடன் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தலைவர் பதவிக்கு போட்டியிட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் சசி தரூர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது