1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 20 ஜூன் 2022 (21:28 IST)

கொரோனா பாதிப்பில் இருந்து குணம்: வீடு திரும்பினார் சோனியா காந்தி

Sonia
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார் 
 
அவர் படிப்படியாக குணமாகி வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறிய நிலையில் தற்போது அவர் முழுவதுமாக குணமடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 இதனை அடுத்து சற்று முன்னர் சோனியா காந்தி டெல்லி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதாகவும் இருப்பினும் அவர் வீட்டில் சில நாட்கள் தனிமைப் படுத்திக் கொண்டு சில சிகிச்சைகளை மேற்கொள்வார் என்றும் கூறப்படுகிறது 
 
சோனியாகாந்தி குணமாகி வீடு திரும்பியதை அடுத்து அவருக்கு காங்கிரஸ் தொண்டர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.