நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தை முடித்த வடிவேலு… எப்போ ரிலீஸ்?
வடிவேலு நடிக்கும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு முடிந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
வடிவேலு நடிப்பில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் சுராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. கடந்த சில மாதங்களாக இந்த படத்தின் முன் தயாரிப்புப் பணிகள் நடந்து வந்த நிலையில் இப்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் பாடல்களுக்கு நடனம் அமைக்க பிரபுதேவா ஒப்பந்தம் ஆகியுள்ளார். இது சம்மந்தமான அறிவிப்பை லைகா வெளியிட்டது.
விறுவிறுப்பாக நடந்து வந்த இந்த படத்தின் ஷூட்டிங் பெரும்பாலும் முடிந்துவிட்டதாம். இன்னும் 4 நாட்கள் மட்டுமே இந்த படத்தின் ஷூட்டிங் மீதம் இருப்பதாகவும், அதுவும் ஒரு பாடல் காட்சி மட்டுமே படமாக்கப்பட வேண்டி உள்ளதாகவும் சொல்லப்பட்ட நிலையில் தற்போது அந்த பாடல் காட்சியும் படமாக்கப்பட்டு விட்டதாம். இதனால் விரைவில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படம் வெளியாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.