ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 3 நவம்பர் 2023 (13:58 IST)

பாம்பு விஷம்...போதை மருந்து விருந்தில் சிக்கிய வலதுசாரி பிரசார யூடியூபர்

Elvish Yadav
வலதுசாரி பிரசார யூடியூபர்  எல்விஷ் யாதவ்   போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
 

எல்விஷ் யாதவ் ரேவ் பார்ட்டி எனப்படும் போதை விருந்துகளை ஏற்பாடு செய்வதாக கூறப்படுகிறது. இந்த விருந்தில்,பாம்பு விஷம் மற்றும் போதைப் பொருட்களை கைப்பற்றியுள்ளதாக நொய்டா போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதுதொடர்பாக, எல்விஷின் கூட்டாளிகள் ராகுல், திடு நாத், ஜெயகரன் நாராயண், ரவி நாத் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்  அவர்களிடம் இருந்து 9 பாம்புகள் கண்டுபிடிக்கப்பட்டதாகக தகவல் வெளியாகிறது.

இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், எல்விஷின் பிறந்த நாள் விழா பிரமாண்டமான நடைபெற்ற நிலையில், இதில், ஹரியானா முதல்வர் மனோகர் கட்டா நேரில்  கலந்துகொண்டு வாழ்த்த்து கூறியதாக தகவல் வெளியாகும் நிலையில் இது  சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.