1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 23 மே 2024 (17:37 IST)

பெலிக்ஸ் ஜெரால்டுக்கு ஒரு நாள் போலீஸ் காவல்.! கோவை நீதிமன்றம் உத்தரவு..!!

Jeraold
பெண் காவலர்களை இழிவாக பேசிய சவுக்கு சங்கரின் வீடியோவை யூடியூப் சேனலில் வெளியிட்ட விவகாரத்தில் பெலிக்ஸ் ஜெரால்டை ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க கோவை நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
 
ரெட் பிக்ஸ் யூடியூப் சேனலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதன் உரிமையாளர் பெலிக்ஸ் ஜெரால்ட், சவுக்கு சங்கரை நேர்காணல் செய்திருந்தார். அப்போது பெண் காவலர்கள் குறித்து சவுக்கு சங்கர் இழிவாக பேசியதை, தனது யூடியூப் சேனலில் ஒளிபரப்பி இருந்தார். 
 
இந்த வீடியோ தொடர்பாக கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சவுக்கு சங்கரை கைது செய்தனர். டெல்லியில் தலைமறைவாக இருந்த பெலிக்ஸ் ஜெரால்டை கைது செய்து தமிழகத்திற்கு அழைத்து வந்தனர். 
 
திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்த பெலிக்ஸ் ஜெரால்டை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க கோவை சைபர் கிரைம் போலீசார் கோவை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு இன்று கோவை நீதிமன்றத்தில் நீதிபதி சரவணபாபு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, ஒரு நாள் மட்டும் காவலில் எடுத்து விசாரிக்க கோவை சைபர் கிரைம் போலீசாருக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார்.


நாளை மாலை 4 மணிக்கு அவரை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என நீதிபதி ஆணை தெரிவித்தார். இதையடுத்து பலத்த பாதுகாப்புடன் பெலிக்ஸை போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.