புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 25 ஜூலை 2019 (10:38 IST)

மகாராஷ்டிராவில் நில அதிர்வு.. மக்கள் பீதி

மகாராஷ்டிராவில் இன்று அதிகாலை நில அதிர்வு ஏற்பட்டதில் மக்கள் பீதியடைந்து வீட்டை விட்டு வெளியே ஓடினர்.

மகாராஷ்டிரா மாநிலம் பல்கார் மாவட்டத்தில் இன்று அதிகாலை 1.05 மணியளவில் திடீரென நில அதிர்வு ஏற்பட்டது. இதனால் பீதியடைந்த மக்கள் வீட்டை விட்டு வெளியே ஓடி, சாலையில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 3.6 ஆக பதிவானது. எனினும் சில வினாடிகளே ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் பல்கார் பகுதியில் எந்த வித சேதமும் ஏற்படவில்லை என தெரியவருகிறது.