ஒரே கடையில் முடிவெட்டிய 6 பேர்களுக்கு கொரோனா பாசிட்டிவ்: அதிர்ச்சி தகவல்
ஒரே கடையில் முடிவெட்டிய 6 பேர்களுக்கு கொரோனா பாசிட்டிவ்
ஒரே கடையில் முடி வெட்டிய 6 பேர்களுக்கு கொரோனா பாசிட்டிவ் என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
கொரோனா வைரஸ் இந்தியா முழுவதும் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, தற்போது இரண்டாம் கட்ட ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு சலூன் கடையில் முடி வெட்டிய 6 பெர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
கொரோனா பாதிப்பு இருந்த ஒருவர் சலூன் கடைக்கு வந்ததாகவும், அதனை அடுத்து அவருக்கு பயன்படுத்திய கத்தரி மற்றும் சலூன் சாதனங்ன்களை மற்றவர்களுக்கும் பயன்படுத்தியதால் கொரோனா பரவும் வைரஸ் மற்றவர்களுக்கும் பரவியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது
இது குறித்து அப்பகுதியில் காவல்துறையினர் விசாரணை செய்து ஆறு பேரையும் தனிமைப்படுத்தி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதனை அடுத்து சலூன் கடைகளுக்கு செல்பவர்கள் கவனமாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கடைக்காரர்களும் ஒவ்வொரு முறையும் முடி வெட்டுதல் அல்லது ஷேவிங் செய்தபின் கிருமிநாசினி கொண்டு சலூன் கருவிகளை சுத்தம் செய்துவிட்டு அதன்பின் அடுத்தவருக்கு முடி வெட்ட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது