ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 9 மே 2018 (09:09 IST)

மோடிக்கு வாக்கு சேகரித்த சித்தராமையா - கர்நாடகாவில் சலசலப்பு

கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா, வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது, அவர் மோடியை ஆதரித்து பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் வரும் 12 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக கர்நாடக ஆளும் கட்சியான காங்கிரஸ் சார்பில் தலைவர் ராகுல் காந்தியும்,  பாஜக சார்பில் பிரதமர் மோடியும் பல்வேறு இடங்களில் சூறாவளி பிரசாரம் செய்து வருகின்றனர்.
 
இந்நிலையில் நேற்று கர்நாடகா மாநிலம்  மாண்டியா மாவட்டத்தில் மாளவல்லி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நரேந்திர சுவாமியை ஆதரித்து முதலமைச்சர் சித்தராமையா பிரசாரம் செய்தார்.
 
அப்போது பேசுகையில், சித்தராமையா தவறுதலாக அனைத்து கிராமங்களிலும் சாலை வசதி, குடிநீர் வசதி செய்யப்பட்டதற்கு நாங்களும், நரேந்திர மோடியுமே காரணம் என்றார்.
இதனைக்கேட்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக வேட்பாளர் நரேந்திர சுவாமி, சித்தராமையாவின் பேச்சில் குறிக்கிட்டார். பிறகு சித்தராமையா தனது தவறை திருத்திக் கொண்டு பேச ஆரம்பித்தார். சித்தராமையா பாஜகவை ஆதரித்து பேசியதால், அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது.