வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 23 ஜூலை 2024 (15:04 IST)

திடீரென போராட்டம் செய்த முதலமைச்சர்.. அமைச்சர்களும் போராட்டம்.. கர்நாடகாவில் பரபரப்பு..!

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மற்றும் அமைச்சர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
கர்நாடக மாநிலத்தில் மகரிஷி வால்மிகி பழங்குடியினர் வளர்ச்சி ஆணையத்தில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு கூறப்பட்ட நிலையில் இதுகுறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.
 
இந்த நிலையில் இந்த ஊழலில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா அவர்களை சம்பந்தபடுத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் முயற்சி செய்வதாக கூறப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சர் சித்தராமையா திடீரென போராட்டத்தில் ஈடுபட்டார்.
 
சட்டசபை வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு அவர் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் இந்த போராட்டத்தில் அமைச்சர்களும் கலந்து கொண்டனர். துணை முதலமைச்சர் டிகே சிவக்குமார் உள்பட பலரும் கலந்து கொண்டு போராடியது பரபரப்பை ஏற்படுத்தியது.
 
இந்த ஊழலில் முதலமைச்சருக்கு சம்பந்தம் இருப்பதாக கூறும் படி அதிகாரிகளை அமலாக்கத்துறை வற்புறுத்துவதாகவும் இதனால் போராட்டம் நடத்தி வருவதாகவும் டி கே சிவகுமார் செய்தியாளர்களிடம் கூறினார்.
 
 
 
Edited by Mahendran