வெள்ளி, 20 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: திங்கள், 22 ஜூலை 2024 (11:19 IST)

முதலமைச்சர் குறித்து அவதூறு பேச்சு.. நடிகை ஸ்ரீரெட்டி மீது வழக்குப்பதிவு..!

srireddy
ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு ரெட்டி குறித்து அவதூறு பேச்சு பேசியதாக நடிகை ஸ்ரீரெட்டி வழக்கு பதிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண், அமைச்சர்கள் லோகேஷ் ,அனிதா ஆகியோர்கள் குறித்து ஸ்ரீ ரெட்டி அவதூறாக பேசியதாக காவல்துறையை புகார் அளிக்கப்பட்டது.
 
இந்த புகாரின் அடிப்படையில் ஸ்ரீதேவி மீது பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். விரைவில் அவர் கைதாகவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
ஏற்கனவே நடிகை ஸ்ரீரெட்டி இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். தனக்கு பட வாய்ப்பு தருவதாக கூறிய தன்னை தவறாக பயன்படுத்தியதாக கூறிய ஸ்ரீரெட்டி திடீரென நடு ரோட்டில் ஆடைகளை களைந்து போராட்டமும் நடத்தினார்.
 
தெலுங்கு நடிகர், இயக்குனர்  உள்ளிட்ட பலர் இவரது பாலியல் புகாரில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது அரசியல் பிரமுகர்கள்மீதும் அவர் அவதூறு பேசி உள்ளதை அடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran