புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 30 மார்ச் 2018 (10:13 IST)

பழம்பெரும் நடிகையை நேரில் சந்தித்து நலம் விசாரித்த கர்நாடக முதலமைச்சர்

ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிரும் பழம்பெரும் நடிகை ஜெயந்தியை கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
நடிகை ஜெயந்தி எம்.ஜி.ஆர், ஜெமினி கணேசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார். மேலும் பல்வேறு மொழிகளிலும் நடித்திருக்கிறார். இவர் பெங்களூரில் வசித்து வந்தார்.
 
ஆஸ்துமா நோயால் அவதிப்பட்டு வந்த நடிகை ஜெயந்திக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகை ஜெயந்தியை, கர்நாடக முதலமைச்சர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வாழ்த்து தெரிவித்தார்.