Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராகுலை கலாய்த்த மோடி ; பதிலடி கொடுத்த சித்தராமய்யா

Updated: புதன், 2 மே 2018 (15:57 IST)
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குறித்து பிரதமர் மோடி தெரிவித்த கருத்திற்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யா பதிலடி கொடுத்துள்ளார்.

 
கர்நாடகாவில் தேர்தல் நெருங்கி வருகிறது. வரும் மே 12 ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. அதன் பின்னர் மே 15 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் வெளியாக உள்ளது. எனவே, அங்கு தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது.
 
சமீபத்தில் கர்நாடகாவில் காங்கிரஸின் கோட்டை எனக்கூறப்படும் சந்தேமரஹள்ளி என்ற இடத்தில் பேசிய பிரதமர் மோடி “கர்நாடக மாநிலத்தில் உங்கள் அரசு செய்த சாதனையை 15 நிமிடங்கள் காகிதத்தில் எழுதி வைக்காமல் பேச முடியுமா?” என சவால் விடுத்தார்.

 
இந்நிலையில், அதற்கு பதிலடி கொடுத்துள்ள சித்தராமய்யா தனது டிவிட்டர் பக்கத்தில் “நான் உங்களுக்கு சவால் விடுகிறேன். எடியூரப்பா ஆட்சியில் இருந்த போது செய்த சாதனைகளை பேப்பரை பார்த்து உங்களால் 15 நிமிடம் பேசமுடியுமா?” என சவால் விடுத்துள்ளார்.

எல்லாம் காட்டு

விஜய்க்கும் ஆதவ் அர்ஜூனாவிற்கும் அபராதம் விதிப்பேன்: நீதிபதி கண்டிப்பு..!

இளைய தலைமுறைக்கு வழிவிடுகிறேன்.. அரசியல் இருந்து நிதின் கட்காரி ஓய்வா? மோடி, அமித்ஷாவும் பின்பற்றுவார்களா?

5 வயது குழந்தைக்கும் ஆதார் பயோமெட்ரிக் அவசியம்.. ஆன்லைனில் செய்ய முடியாது.. செப் 30 வரை அவகாசம்...

தேனி அல்லிநகரத்தில் ஆதித்யா பிர்லா ஹவுசிங் ஃபைனான்ஸ்!.. புதிய கிளை ஓப்பன்!..

பரந்தூர் விமான நிலையத்திற்கு எவ்வளவு நிலம் கையகப்படுத்தப்பட்டது?!.. சி.டி.நிர்மல்குமார் விளக்கம்!..

அடுத்த கட்டுரையில்
Show comments