ஆணுறுப்பை துண்டித்து வாயில் திணித்த கொடுமை.. ஆசிரியர் படுகொலையால் அதிர்ச்சி..!
மேற்கு வங்காளத்தை சேர்ந்த ஆசிரியர் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்ட நிலையில் அந்த உடலில் அவருடைய ஆணுறுப்பு துண்டிக்கப்பட்டு வாயில் திணிக்கப்பட்டு இருந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்குவங்க மாநிலத்தில் உள்ள அலிபூர்துவார் என்ற பகுதியில் நேற்று முன்தினம் இறந்த உடல் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து விசாரணை செய்தபோது அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியை சேர்ந்த ஆசிரியர் சாந்தா பீர் லாமா என்ற அவருடைய உடல் தான் என்பது தெரிய வந்துள்ளது.
கடந்த சில வருடங்களாக அவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் ஆசிரியராக பணி செய்து கொண்டு உள்ளூரில் உள்ள தேவாலயத்திலும் சேவை செய்து வந்தார். இந்த நிலையில் அவர் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில் 7 பேரை அவரது குடும்பத்தினர் சந்தேகப்படுவதாக புகார் அளித்துள்ளனர்.
அவரது உடலில் அவருடைய ஆணுறுப்பை துண்டித்து அவரது வாயில் திணிக்கப்படும் அளவுக்கு வன்மை உள்ளவர்கள் யாராக இருக்கும் என்பது குறித்து போலீஸ் விசாரணை செய்து வருகின்றனர்.