புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 16 பிப்ரவரி 2021 (09:44 IST)

வாடிக்கையாளருக்கு தங்க ரேசரில் ஷேவிங்: புனே முடிதிருத்தும் தொழிலாளி அசத்தல்!

வாடிக்கையாளருக்கு தங்க ரேசரில் ஷேவிங்
புனேவை சேர்ந்த முடிதிருத்தும் தொழிலாளி ஒருவர் தனது வாடிக்கையாளர்களுக்கு தங்க ரேசரில் சேவிங் செய்து வரும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது 
 
புனேவை சேர்ந்த முடிதிருத்தும் தொழிலாளி அவிநாஷ் என்பவர் தனது கடையில் வாடிக்கையாளர்களை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக புதிய முயற்சி ஒன்றை செய்துள்ளார் 
 
இதற்காக அவர் தங்கத்தினாலான ரேஸர் ஒன்றை நகைக்கடையில் செய்து வாங்கியுள்ளார். இந்த ரேஸரின் மதிப்பு ரூபாய் 4 லட்சம் என்பது குறிப்பிடதக்கது. தனது கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் ஷேவிங் செய்யும் போது இந்த 4 லட்சம் மதிப்புள்ள தங்க ரேசரில் தான் சேவிங் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இதனை அடுத்து தங்கரேசரில் சேவிங் செய்து கொள்ள அவரது கடையை நோக்கி வாடிக்கையாளர்கள் அதிகம் வருகிறார்கள். இதனால் தனக்கு அதிகமாக வருமானம் வருவதாக அவர் தெரிவித்துள்ளார் 
 
தொழில் போட்டி அதிகமாக இருக்கும் நேரத்தில் இதுபோன்ற வித்தியாசமான முயற்சிகளை செய்தால் மட்டுமே வாடிக்கையாளர்களை கவர முடியும் என்றும் அவர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்