எங்கள் சில்லரை கூட உலக அழகியாகிவிட்டது; காங்கிரஸ் தலைவரின் சர்ச்சை கருத்து
பாஜக பணமதிப்பிழப்பு விவகாரத்தை கேலி செய்யும் வகையில் காங்கிரஸ் தலைவர் சசி தரூர் உலக அழகி பட்டம் வென்ற மனுஷி சில்லர் பெயரை குறிப்பிட்டு டுவிட்டரில் பதிவிட்ட கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவை சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சசி தரூர், தனது டுவிட்டர் பக்கத்தில் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றத்தை வைத்து பாஜகவின் பணமதிப்பிழப்பு குறித்து கேலியாக விமர்சனம் செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பணமதிப்பிழப்பு செய்ய நன் நாணயம் என்ன தவறு செய்தது. ஆனால் தற்போது இந்திய சில்லரை உலக அரங்கில் ஆதிக்கம் பெற்றதை பாஜக உணர்ந்திருக்கும். நம் சில்லர் கூட உலக அழகி ஆகிவிட்டார் என பதிவிட்டுள்ளார்.
மனுஷி சில்லர் பெயரை இந்தியாவின் சில்லரையுடன் ஒப்பிட்டு கூறியுள்ளார். இவரது இந்த கருத்துக்கு தேசிய பெண்கள் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. நாட்டுக்கு பெருமை சேர்த்த ஒரு பெண்ணின் சாதனையை சசி தரூர் சிறுமைப்படுத்தி விட்டார். அவர் தனது செயலுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து சசி தரூர், தான் தவறான நோக்கத்தில் எதையும் செய்யவில்லை என்றும், நகைச்சுவைக்காக மட்டுமே கூறினேன். மனுஷி சில்லர் பற்றி தவறான நோக்கத்தில் எதையும் சொல்லவில்லை. அனைவரும் ‘சில்’லாக இருங்கள் என டுவீட் செய்துள்ளார்.
இவரது இரண்டாவது டுவீட் முதல் பதிவுக்கு எழுந்த கண்டனங்களுக்கு விளக்கம் அளிக்கும் விதமாகவும் மன்னிப்பு கோரூம் விதமாக அமைந்துள்ளது.