திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 23 டிசம்பர் 2022 (17:34 IST)

டெல்லியில் கடும் குளிர், பனிமூட்டம்....பள்ளிகளுக்கு 2 வாரம் விடுமுறை அறிவிப்பு

தலைநகர் டெல்லியில் கடும் பனிமூட்டம் நிலவுவதால் அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி யூனியனில் முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடந்து வருகிறது.

இந்த நிலையில், சில நாட்களாக டெல்லியில், கடும் பனிமூட்டமும், குளிரும் நிலவுகிறது. இதனால், அதிகாலையில், வாகனங்கள், ஆட்கள் செல்வது வாகன ஓட்டிகளுக்கு தெரியவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால், பள்ளி மாணவர்கள், அதிகாலையில் எழ்ந்து பள்ளிகளுக்குச் செல்வதில் சிரமம் நிலவுகிறது.

எனவே.  டெல்லி அரசு 2 வாரம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, டிசம்பர் 25 ஆம் தேதி முதல் ஜனவரி 5 ஆம் தேதி வரை  அதிகாரப்பூர்வமாக டெல்லி அரசு விடுமுறை அளித்துள்ளது.