செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: வியாழன், 3 அக்டோபர் 2019 (13:57 IST)

சைரா நரசிம்மா ரெட்டிக்கு கட் அடித்து சென்ற போலீஸார்...அதிரடி நடவடிக்கை எடுத்த உயர் அதிகாரி

சைரா நரசிம்மா ரெட்டி திரைப்படத்தை பார்த்த 7 போலீஸார்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

தெலுங்கின் முன்னணி நடிகரான சிரஞ்சீவி நடிப்பில் வெளியான திரைப்படம் சைரா நரசிம்மா ரெட்டி. இந்த திரைப்படம் இந்திய அளவில் பெரும் வரவேற்ப்பை பெற்று வருகிறது. இந்த திரைப்படம் தமிழ், ஹிந்தி, ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டாலும், இது தெலுங்கு படம் என்பதால் குறிப்பாக ஆந்திரா, தெலுங்கானா ஆகிய பகுதிகளில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

இந்நிலையில், இத்திரைப்படத்தை பணி நேரத்தில் 7 போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள் பார்க்கச்சென்றுள்ளனர். மேலும் அப்போது திரையரங்கில் இருப்பது போன்ற செல்ஃபி வீடியோவையும் இணையத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த புகைப்படம் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு சென்றது. மேலும் இவர்கள் கர்னூல் மாவட்ட காவல் துறையை சேர்ந்தவர்கள் எனவும் அறியப்படுகிறது.

குறிப்பாக நேற்றைய தினம் காந்தி ஜெயந்தி என்பதால், சமூக நலத்துறை திட்டங்கள் பல அறிவிக்கப்பட்டன. எனவே போலீஸார் பணியில் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் 7 சப் இன்ஸ்பெக்டர்கள் சினிமா பார்க்க சென்ற புகைப்படம், கர்னூல் எஸ்.பி. பகீரப்பா கவனத்துக்கு சென்றது. உடனே அந்த 7 பேர் மீது நடவடிக்கை எடுக்குமாறு டி.எஸ்.பிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அந்த 7 சப் இன்ஸ்பெக்டர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.