சுமார் 1000 புள்ளிகள் எகிறிய சென்செக்ஸ்: முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி
இந்திய பங்குச் சந்தை இன்று சுமார் 1000 புள்ளிகள் வரை சென்செக்ஸ் உயர்ந்ததால் மீண்டும் 50 ஆயிரத்தை தாண்டி சென்செக்ஸ் விற்பனையாகி உள்ளது
கடந்த சில நாட்களாகவே பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்த நிலையில் இன்று திடீரென 975 புள்ளிகள் சென்செக்ஸ் உயர்ந்தது. இதனை அடுத்து இன்றைய வர்த்தக முடிவின் போது 50,540 என சென்செக்ஸ் இருந்தது. அதே போல் நிஃப்டி 269 புள்ளிகள் உயர்ந்து 15175 என வர்த்தகம் முடிவடைந்தது. இதனால் இன்று முதலீட்டாளர்கள் மிகப் பெரிய அளவில் லாபம் அடைந்துள்ளனர்
கடந்த சில நாட்களாகவே பங்குச்சந்தை இறக்கத்துடன் இருந்த நிலையில் இன்று ஒரே நாளில் சுமார் 1000 புள்ளிகள் உயர்ந்து இருப்பது பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. குறிப்பாக தங்கம் சார்ந்த பங்குகள் நல்ல விலையேற்றம் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.