15 நாள் ஊரடங்கு அமல்படுத்தினால் ஒரு லட்சம் உயிர்களை காப்பாற்றலாம்: அறிவியல் நிறுவனம்
நாடு முழுவதும் 15 நாள் ஊரடங்கு அமல்படுத்தினால் சுமார் ஒரு லட்சம் உயிர்களை காப்பாற்றலாம் என இந்திய அறிவியல் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஒவ்வொரு நாளும் மூன்று இலட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் அடுத்த 15 நாட்களில் இந்தியாவில் நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தினால் குறைந்தது ஒரு லட்சம் பேர்களின் உயிரை காப்பாற்றலாம் என இந்திய அறிவியல் நிறுவனம் எச்சரித்துள்ளது
15 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல் படுத்தினால் ஒரு லட்சம் பேர் உயிரிழப்பதை தடுக்கலாம் என்றும் போதிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால் கொரோனா தொற்றில் அமெரிக்காவை இந்தியா மிஞ்சி விடும் என்றும் இந்திய அறிவியல் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது