வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 22 பிப்ரவரி 2023 (09:53 IST)

சவுதி அரேபியாவில் தமிழக நர்ஸ்களுக்கு வேலை.. விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்..!

nurse
சவுதி அரேபியாவில் நர்ஸாக பணிபுரிய தமிழக நர்ஸ்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ள நிலையில் இந்த பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
சவுதி அரேபியா அரசு மருத்துவமனையில் பணியாற்ற இரண்டு ஆண்டு அனுபவம் கொண்ட நர்சுகள் தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவன இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
நாளை அதாவது பிப்ரவரி 23ஆம் தேதி இந்த பணிக்கு விண்ணப்பிக்க கடைசி தினம் என்பதால் இன்றே விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகின்றனர். www.omcmanpower.com என்ற முகவரியில் தகுதியுடைய நர்சுகள் விண்ணப்பிக்கலாம் என்றும் பிப்ரவரி 28, மார்ச் 1 ஆகிய தேதிகளில் நேர்காணல் நடைபெறும் என்றும் தேர்வாகும் பணியாளர்களிடம் சேவை கட்டணமாக ரூபாய் 35 ஆயிரத்து 400 வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva