செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 3 மே 2024 (10:17 IST)

400 என்பதெல்லாம் ஜோக்.. பாஜக 200 இடங்களில் கூட வெற்றி பெறாது.. சசி தரூர் கிண்டல்

நடைபெற்று வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 400 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெறும் என்று அந்த கட்சியின் தலைவர்கள் கூறிவரும் நிலையில் கூட பாரதிய ஜனதா கட்சி 200 தொகுதிகளில் கூட வெற்றி பெறாது என்றும், 400 இடங்களில் வெற்றி என்பதெல்லாம் ஜோக் என்றும் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மக்களவைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களில் கைப்பற்றும் என்று கருத்துக்கணிப்புகள் கூறி வரும் நிலையில், சசிதரூர் இதுகுறித்து கருத்து தெரிவித்த போது, ‘தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மையை இழந்து வருகிறது என்றும் 300 பெறுவது கூட அவர்களுக்கு சவாலான விஷயம் என்றும் 400 பெறுவோம் என்று கூறுவது ஜோக் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

200 கூட அவர்களுக்கு சவாலான நிலை என்பது தான் தற்போதைய நிலை என்றும் இந்த தேர்தல் பாஜகவுக்கு தகுந்த பாடமாக இருக்கும் என்றும் தெரிவித்தார். இந்தியாவின் மக்கள் தொகையில் 80 சதவீதம் பேர் வருமானத்தில் சரிவை கண்டுள்ளனர் என்று எனவே மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

Edited by Mahendran