புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 18 நவம்பர் 2018 (18:29 IST)

விண்வெளியில் இருந்து தெரியும் சர்தார் சிலை: ஆச்சரிய புகைப்படம்

பாரத பிரதமர் நரேந்திரமோடி சமீபத்தில் உலகின் மிகப்பெரிய சிலையான சர்தார் வல்லாபாய் பட்டேலின் சிலையை திறந்து வைத்தார். ரூ.3000 கோடி செலவில் கம்பீரமாக அமைந்துள்ள இந்த சிலை இந்தியாவின் பெருமையை உலகிற்கு பறைசாற்றி வருகிறது.

இந்த நிலையில் அமெரிக்க தனியார் நிறுவனம் ஒன்று விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தில் சர்தார் சிலை தெரிகிறது. இதற்கு முன் எகிப்து பிரமிடு மட்டுமே விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தில் தெளிவாக தெரிந்த நிலையில் தற்போது அந்த பட்டியலில் சர்தார் சிலையும் இணைந்துள்ளது.

கடந்த 2013ஆம் ஆண்டு தொடங்கிய இந்த சிலை ஐந்து ஆண்டுகளில் செய்து முடிக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை பார்க்க உலகின் பல நாடுகளில் இருந்தும் சுற்றுலாப்பயணிகள் குவிந்து வருவதால் இந்த சிலைக்காக செலவு செய்த தொகை இன்னும் சில வருடங்களில் வருமானமாக வந்துவிடும் என்று கூறப்படுகிறது.