திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 22 பிப்ரவரி 2023 (17:36 IST)

முதல்வரின் மகன் என்னை கொல்ல சதி செய்கிறார். எம்பி பகீர் குற்றச்சாட்டு..!

sanjay raudh
முதல்வரின் மகன் என்னை கொல்ல சதி செய்கிறார். எம்பி பகீர் குற்றச்சாட்டு..!
என்னை கொல்ல முதல்வரின் மகன் சதி செய்கிறார் என சிவசேனா கட்சியின் எம் பி சஞ்சய் ரெளத்  கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா கட்சி இரண்டாக உடைந்து உள்ளது என்பதும் முதல்வர் ஷிண்டே தலைமையிலான அணியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது என்பது தெரிந்ததே.
 
இந்த நிலையில் சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ரௌத் என்பவர் சமீபத்தில் பேட்டி அளித்த போது முதலமைச்சர் மகன் தன்னை கொல்ல முயற்சி செய்வதாகவும் இதற்காக கூலிப்படையிடம் அவர் பேரம் பேசி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்
 
அவரது இந்த குற்றச்சாட்டு மகாராஷ்டிரா மாநில அரசியலில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. மேலும் தனக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
 
Edited by Siva