திங்கள், 13 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: ஞாயிறு, 4 செப்டம்பர் 2016 (13:56 IST)

இளம்பெண் கற்பழிப்பு புகார் - முன்னாள் அமைச்சர் கைது

இளம்பெண் கற்பழிப்பு புகார் அளிக்கப்பட்டதை அடுத்து ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் அமைச்சர் சந்தீப் குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.
 

 
புதுடெல்லி மாநிலம், சுல்தான்பூர் மஜிரா தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சந்தீப்குமார். அரவிந்த் கெஜ்ரிவால் அமைச்சரவையில் குழந்தைகள் நலன் மற்றம் சமூக நலத்துறை அமைச்சராக பணியாற்றி வந்தார்.
 
இந்நிலையல் இவர், சில பெண்களுடன் ஆபாசமாக இருப்பது போன்ற சி.டி.க்கள் சமீபத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அது தொடர்பான சிடியும், 11 புகைப்படங்களும் ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனையடுத்து அவர் கட்சியிலிருந்து சந்தீப்குமார் நீக்கப்பட்டார்.
 
இதற்கிடையில், அவருடன் நெருக்கமாக இருக்கும் பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், சந்தீப் குமார் தனக்கு மயக்க மருந்து கொடுத்து கற்பழித்ததாக குற்றம் சாட்டினார். அதன் அடிப்படையில் சந்தீப் குமார் மீது கற்பழிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.