புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 15 ஜூலை 2020 (11:10 IST)

துரத்தி அடித்தாலும் விஸ்வாசம் காட்டும் சச்சின் பைலட்: பாஜகவுக்கு பே பே!!

நான் பாஜகவில் இணைய மாட்டேன் என காங்கிரஸில் இருந்து விலக்கப்பட்ட சச்சின் பைலட் தெரிவித்துள்ளார். 
 
ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், துணை முதல்வர் சச்சின் பைலட்டிற்கும் இடையே மோதல் எழுந்தது. இதனால் அங்கு ஆட்சி கவிழும் சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால்,  காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் அசோக் கெலாட் தலைமையிலான அரசாங்கத்தை ஆதரிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.    
 
இதனைத்தொடர்ந்து நேற்று ஜெய்ப்பூரில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. அதில் துணை முதல்வர் சச்சின் பைலட்டை காங்கிரசிலிருந்து நீக்க எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தீர்மானம் செய்தனர்.   
 
அதன்படி சச்சின் பைலட்டின் துணை முதல்வர் பதவியும் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது. சச்சின் பைலட்டுக்கு பதில் கோவிந்த் சிங் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் இதற்கு சச்சின் பைலட் சத்தியத்தை தொந்தரவு செய்யலாம்; ஆனால் தோற்கடிக்க முடியாது என ட்விட்டரில் பதிவிட்டார். இத்னைத்தொடர்ந்து தற்போது நான் பாஜகவில் இணையபோவதில்லை என அறிவித்துள்ளார். 
 
அவர் கூறியதாவது, டெல்லியில் தலைமை பதவிகளில் உள்ளோரின் மனதில் நஞ்சை கலக்க சிலர் நான் பாஜகவில் இணைய இருப்பதாக கூறிவருகிறார்கள். ஆனால் நான் பாஜகவில் இணைய மாட்டேன் என சச்சின் பைலட் தெரிவித்துள்ளார்.