வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 23 ஏப்ரல் 2024 (07:28 IST)

பிறந்த நாளில் கேக் சாப்பிட்டு சிறுமி இறந்த விவகாரம்.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!

கடந்த மார்ச் மாதம் பிறந்தநாள் கேக் சாப்பிட்டு சிறுமி பலியான விவகாரத்தில் தற்போது விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

பஞ்சாப் மாநிலத்தில் கடந்த  மார்ச் 24 ஆம் தேதி பிறந்த நாளுக்காக சிறுமி ஆன்லைனில் கேக் ஆர்டர் செய்து சாப்பிட்ட நிலையில் அந்த கேக்கை சாப்பிட்ட சிறிது நேரத்தில் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து பஞ்சாப் மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை செய்த போது கேக்கின் மாதிரியை சோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்போது அந்த சோதனையின் முடிவு வெளி வந்துள்ள நிலையில் அந்த கேக்கில் செயற்கை இனிப்பு அதாவது சாக்கரின் அதிகமாக கலந்தது தான் சிறுமி உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தியது என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

செயற்கை சர்க்கரை ஆன சாக்கரின் மிகவும் ஆபத்தானது என்றும் அதனை கவனமாக பயன்படுத்த வேண்டும் என்றும் அளவுக்கு அதிகமானால் உடலில் உள்ள குளுக்கோஸ் உயரும் அபாயம் இருக்கிறது என்றும் இதுதான் பஞ்சாப்  சிறுமி   நிகழ்வில் நடந்ததாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து  சாக்கரின்  அதிகமாக பயன்படுத்திய பேக்கரி மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேக்கரி உரிமையாளர் மீது எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையில் தெரிவித்துள்ளனர்.

Edited by Siva