Daily Horoscope
✕

ரூ.80ஐ நெருங்குகிறது டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு: வரலாறு காணாத சரிவு!

Written By Mahendran
Updated: வெள்ளி, 1 ஜூலை 2022 (11:56 IST)
கடந்த சில நாட்களாக அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு மிகப்பெரிய அளவில் சரிந்து வருகிறது என்பதும் வரலாறு காணாத வகையில் தற்போது 79 ரூபாய்க்கும் அதிகமாகி விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 70 ரூபாய் அளவில் இருந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக தினமும் சரிவடைந்து தற்போது 79 ரூபாய்க்கும் அதிகம் ஆகிவிட்டது.
 
சற்றுமுன் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 79 ரூபாய் 12 காசுகள் என வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. டாலருக்கான தேவை அதிகரித்துள்ளதால் அதன் மதிப்பு அதிகரித்து ரூபாய் மதிப்பு குறைந்து வருவதாக வர்த்தக வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 
 
டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பின் சரிவு ஏற்றுமதியாளர்களுக்கு லாபத்தையும் இறக்குமதியாளர்களுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

எல்லாம் காட்டு

இன்று முதல் இந்தியாவில் இருந்து நேபாளத்திற்கு ரயில் சேவை.. இருநாட்டு பிரதமர்கள் தொடங்கி வைப்பு..

ரூ.5,000 வரை உடனடி அபராதம் விதிக்கப்படும்.. சபரிமலை பக்தர்களுக்கு கேரள அரசு எச்சரிக்கை...

காங்கோவில் கோரத்தாண்டவம் ஆடும் எபோலா!.. 5,600க்கும் மேற்பட்டோர் பலி!..

இனி ரத்தத்துக்கு தட்டுப்பாடு இருக்காது! தமிழகம் முழுவதும் ஆண்டு முழுவதும் ரத்த தான முகாம்... அரசு அதிரடி அரசாணை!

ஆறு மாதங்களில் ரூ.40,500 கோடி கடன் வாங்கிய தமிழ்நாடு.. அதிகமா? குறைவா?

அடுத்த கட்டுரையில்
Show comments