வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 19 ஜூன் 2018 (15:04 IST)

ஜம்மு காஷ்மீரில் ஆட்சி கவிழுமா?

ஜம்மு காஷ்மீரில் முதல்வர் மெஹபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சிக்கான ஆதரவை பாஜக வாபஸ் பெற்றுள்ளதால் காஷ்மீரில் ஆட்சி கவிழும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
 
காஷ்மீரில் மெஹபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சி ஆட்சி நடத்தி கொண்டிருக்கிறது. இந்த கட்சி கடந்த தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்து வெற்றி பெற்றது. ஆனால், சமீபகாலமாக காஷ்மீரில் நிலவும் அசாதாரண சூழல் காரணமாக இரு கட்சிகளிடையே கருத்து வேறுபாடு இருந்தது.
 
இந்நிலையில், இன்று மக்கள் ஜனநாயக  கட்சியுடனான கூட்டணியை முறித்துக் கொள்வதாக ஜம்மு காஷ்மீரின் பாஜக கட்சி பொறுப்பாளர் ராம் தேவ் தெரிவித்துள்ளார். மேலும், அந்த கட்சிக்கு அளித்த வந்த ஆதரவையும் வாபஸ் பெருவதாக அறிவித்துள்ளார்.
 
காஷ்மிரில்  87 எம்.எல்.ஏக்கள் கொண்ட பேரவையில் பெரும்பான்மைக்கு 44 உறுப்பினர்கள் தேவை. பாஜகவுக்கு 25, மக்கள் ஜனநாயக கட்சிக்கு 28 எம். எல்.ஏக்கள் உள்ளனர். தற்போது பாஜக கூட்டணியை முறித்துள்ளதால் அங்கு ஆட்சி கவிழும் நிலைமை ஏற்பட்டுள்ளது.