வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj kiyan
Last Updated : வெள்ளி, 10 ஜனவரி 2020 (20:18 IST)

ரூ. 2,410 கோடி நன்கொடை பெற்றுள்ள பாஜக !

ஒரே ஆண்டில், பாஜக கட்சி ரூ.2410 கோடி ரூபாயை தேர்தல் நிதியாக பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது. 
மத்தியில் பிரதமர் மோடி தலைமயிலான பாஜக ஆட்சி நடைபெற்று  வருகிறது. இக்கட்சி ஒரே ஆண்டில் தேர்தல் செலவுகளுக்காக நன்கொடைகள் வசூலித்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
 
கட்சிகள் மக்கள் மற்றும்  நிறுவனங்களிடம் இருந்து பெற்றாலும் கூட அதை கொடுத்தவர்களைப் பற்றிய விவரத்தை வெளிப்படையாக அறிவிக்க வேண்டியதில்லை.
 
இந்த நன்கொடைகள் நேரடியாகப் பெறுவது மற்றும் தேர்தல் பத்திரம் மூலமாகப் பெறுவது ஆகிய 2 வகையான திட்டங்கள் உள்ளன. இந்நிலையில் கடந்த மக்களவைத் தேர்தலில் பல்வேறு கட்சிகள் தேர்தல் நிதியைப் பெற்றுள்ளன.  
 
அதன்படி, 2018 - 2019 ஆம் ஆண்டில் பாரதிய ஜனதா கட்சி, ரூ.2410 கோடி ரூபாய் நன்கொடை பெற்றுள்ளது. இதில், ரூ4150 கோடி ரூபாயை தேர்தல் பத்திரம் மூலமாகப் பெற்றுள்ளது.
 
மேலும்,ம் காங்கிரஸ் கட்சிக்கு  ரூ.918 கோடி ரூபாய் கிடைத்துள்ளதாகவும், இதில், பத்திரம் மூலமாக ரூ.383 கோடி ரூபாய் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகிறது.