ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 7 ஜூலை 2018 (13:16 IST)

கூட்டத்தை கூட்ட ரூ.7 கோடி செலவு செய்த மோடி!

ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இன்று தலைநகர் ஜெய்ப்பூரில் பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கு ராஜஸ்தான் முதல்-மந்திரி வசுந்தரா ராஜே சிந்தியா ஏற்பாடு செய்துள்ளார். இதில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று ராஜஸ்தான் சென்றுள்ளார்.
 
எனவே, மோடியின் வருகையை முன்னிட்டு ஜெய்ப்பூரில் போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அம்ருதன் கா பார்க் மைதானத்தில் கூட்டம் நடைபெறயுள்ளதால் அந்த பகுதியில் ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 
 
இந்த கூட்டத்தில் மோடி பேசவுள்ளதால், ராஜஸ்தான் மாநிலத்தின் உள்ள 33 மாவட்டங்களில் இருந்து ஆட்களை அழைத்து வரும் பணி கடந்த 2 நாட்களாக நடைபெற்று வந்தது. சுமார் 3 லட்சம் பேர் அழைத்து வரப்பட்டுள்ள நிலையில், இதற்காக ரூ.7 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாம். 
 
கூட்டத்திற்கு ஆட்கள் சுமார் 5600 பஸ்கள் மூலம் அவர்கள் ஜெய்ப்பூருக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். மாநில அரசின் பணம் இப்படி செலவு செய்யப்பட்டதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.