வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 25 ஜனவரி 2023 (22:36 IST)

காஃபி டே நிறுவனத்திற்கு ரூ.26 கோடி அபராதம்!

coffeday
விதிமுறைகளை மீறி முதலீடு செய்ததாக  காஃபி டே எண்டர்பிரைஸ் நிறுவனத்திற்கு ரூ.26கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பிரபல காஃபி டே நிறுவனத்தின் தலைவர் சித்தார்தா கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தற்கொலை செய்து கொண்டார்.

நாட்டையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது இவரதது மரணம். இதுகுறித்து, போலீஸார் விசாரணை செய்ததில், இவரது நிறுவனத்திற்கு பல கோடி ரூபாய்கள் கடன் இருந்ததாக தகவல் வெளியானது.

இதுகுறித்து, பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி தணிக்கை செய்தது. அதன்படி, ஜாஃபி டே நிறுவனம்  அதன் துணை நிறுவனங்களின் முதலீடு பணத்தை வேறொரு பனங்குதாரரின் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளாதாகவும், விதிகளை மீறி ரூ.3535 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இதற்காக, காஃபி டே நிறுவனத்திற்கு ரூ.26 கோடி அபராதம் விதித்துள்ளது; அத்துடன் இந்த அபராதத்தை 45 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என்றும், முதலீடு செய்துள்ளா பணத்தை வட்டியுடன் திரும்பப்  பெற வேண்டுமென செபி உத்தரவிட்டுள்ளது.