ஹவாலா முறையில் ரூ.120 கோடி: பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா குறித்து அமலாக்கத்துறை தகவல்
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு ஹவாலா முறையில் 120 கோடி ரூபாய் திரட்டி உள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு அலுவலங்களில் அதிரடியாக சோதனை செய்யப்பட்டது என்பதும் இந்த சோதனையில் வெளிநாடுகளில் இருந்து கிடைக்கப்பெற்ற ஹவாலா பணம் குறித்த தகவல் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா 120 கோடி ரூபாய் வங்கியில் டெபாசிட்டாக வைத்திருப்பதாகவும், இதில் பெரும்பகுதி ரொக்கமாகவே உள்ளது என்றும் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு இந்த பணம் பயன்படுத்த நிதியை திரட்டி உள்ளதாகவும் அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது
அபுதாபியில் உள்ள ஒரு ஓட்டலில் தான் இந்த ஹவாலா பண பரிமாற்றம் நடந்துள்ளதாக கைது செய்யப்பட்டுள்ள ஒருவர் வாக்குமூலம் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
இந்த பணம் திரட்டுவதில் மூளையாக செயல்பட்டவர்கள் வளைகுடா நாடுகளில் இருப்பதாகவும் அவர்களையும் கைது செய்து விசாரிக்க அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது
மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் தேசிய புலனாய்வு முகமை தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் இன்னும் பல தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.