1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 6 செப்டம்பர் 2019 (13:59 IST)

’ராயல் என்ஃபீல்டு பைக் ’ஓட்டிய சிறுமிக்கு கொலைமிரட்டல் ...

உத்தரபிரதேச மாநிலத்தில் ஒரு சிறுமி இரு சக்கரவாகனம் ஓட்டிச் சென்று, கடையில் பால் வாங்கிவிட்டு வீட்டுக்கு வந்துகொண்டிருந்தார். அப்போது சிலர் ’இனிமேல் நீ பைக் ஓட்டக் கூடாது ’ என மிரட்டியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் நொய்டாவில் உள்ள மிலக் கதனா ( Milak Khatana )என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்  சுனில் மாவி. இவர்  ஜர்சா காவல்நிலையத்தில் ஒரு புகார்  கொடுத்துள்ளார். அதில், ’தனது மகள் ராயல் எண்ஃபீல்டு பைக் ஓட்டிச்சென்று கடையில் பால் வாங்கிக்கொண்டு வரும் போது, அவளை, சச்சின் என்பவர் இனிமேல் நீ இருசக்கர வாகனத்தை ஓட்டக் கூடாது என மிரட்டல் விடுத்துள்ளனர்.’
 
அதுமட்டுமின்றி எங்கள் வீட்டுக்கு வந்த  சிலர், துப்பாக்கியை காட்டி சுட்டு,  இனிமேல் சிறுமி பைக் ஓட்டினால் குடும்பத்துடன் சுட்டுக்கொன்று விடுவதாகவும் கூறி மிரட்டினர்.

நான் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்க 100 எண்ணைத் தொடர்பு கொண்டபோது, போலீஸாரிடம் கூறினால் ,மேலும் பயங்கர விளைவுகளை சந்திக்க நேரிடும் என  மிரட்டினர் ’ என்று தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது : 10 வது படிக்கின்ற சிறுமி, கடந்த 30 ஆம் தேதி,  பைக்கில் கடைக்குச் சென்றுள்ளார். அவளை மறித்து இனிமேல் பைக் ஓட்டக்கூடாது என மிரட்டியுள்ளனர். சிறுமியின் தந்தை கொடுத்த புகாரின்  அடிப்படையில் சச்சின் , கல்லு உள்ளிட்ட சிலர் மீது வழக்குப் பதிவு செய்து  குற்றவாளிகளை தேடி வருகிறோம் என்று தெரிவித்தார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.