’அந்தப் பாட்டை ‘ சாலையில் ’பாடும்’ போக்குவரத்து காவலர் ! வைரல் வீடியோ
நம் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்தில் ஏராளமானவர்கள் உயிரிழப்பதாக ஒரு ஆய்வு அறிக்கை வெளியானது.
இந்நிலையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை பரப்பவே டெல்லியில் உள்ள போக்குவரத்து காவலர் ஒருவர் சாலை விதிகளை ராப்ஸ் பாடலாகக் பாடுகிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகிவருகிறது.
டெல்லியில் போக்குவரத்து தலைமைக் காவலராக பணியாற்றி வருபவர் சந்திப் ஷாஹி(Sandeep Shahi). இவரைக் கண்டாலே சாலையில் உள்ள மக்கள் எல்லோரும் பரவசமாகி விடுவார்கள்.அந்த அளவுக்கு இவர் மக்களை கவர்ந்துள்ளார்.
ஆம்! அவர் சாலைவிதிகளைப் பற்றி ஒரு பாடலில், ஹெல்மெட் அணிவதுடன் , பாதுகாப்பாக சாலை பாதுகாப்பு விதிமுறைகளுக்கு கீழ் படிவதை பற்றி அந்தப் பாடலின் வரிகளில் கூறுகிறார்.
போக்குவரத்து காவலர் ஷாஹி இந்த சாலை விதிமுறைகளை கட்டாயம் பயன்படுத்தச் சொல்வதற்கு பின்னால் ஒரு சோகம் ஒளிந்துள்ளது. அதில், ஒரு சாலை விபத்தில் தன் மனைவியை இழந்தார். அதிலிருந்து, யாரும் சாலைவிபத்தில் இறக்கக் கூடாது என்பதற்காக இந்த சாலை விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.